இறந்த ஹரி வைரவன் - 2 வயது குழந்தையுடன் நிற்கதியான மனைவி - உதவுமா நடிகர் சங்கம்?
மறைந்த துணை நடிகர் ஹரி வைரவனுக்கு கவிதா என்ற மனைவியும், 2 வயதில் யோஷினிஸ்ரீ என்ற குழந்தையும் உள்ளது. ஹரிவைரவனின் ஊதியத்தில் குடும்பம் நடத்திவந்த கவிதா, இப்போது உடைந்த ஓட்டு வீட்டில் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி நிற்கதியாய் தவித்து வருகிறார். செய்வதறியாது தவிக்கும் கவிதாவுக்கு நடிகர் சங்கம் உதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரது உறவினர்கள், பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.