மாமனார், மாமியாரை முள்ளங்கி சாம்பாரால் தீர்த்துக்கட்டிய கொடூர மருமகள் | Cuddalore
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இலங்கையனூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்... வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவருக்கு, விருத்தாச்சலத்தை சேர்ந்த கீதா என்பவருடன் 15 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது...இதில், இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளை விருத்தாசலத்தில் தங்க வைத்து விட்டு, வேல்முருகன் வெளிநாட்டில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்...
இந்நிலையில், கணவனும், மனைவியும் புதிதாக வீடு கட்ட திட்ட மிட்ட நிலையில், அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்...கணவன் வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்ப, அதை வைத்து மனைவி வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்...கிட்டத்தட்ட வீட்டின் கட்டிட பணிகள் முடிவடைந்த நிலையில், டைல்ஸ் கற்கள் பதிப்பது, எலக்ட்ரீக்கல் வேலைப்பாடு போன்ற சின்ன சின்ன வேலைகளே பாக்கி இருந்துள்ளது...
இதற்காக விருத்தாசலம், புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவரை வேல்முருகனின் மனைவி கீதா தொடர்பு கொண்டுள்ளார்...இருவரும் ஒரே ஊர் என்பதால் ஏற்கெனவே ஒருவரையொருவர் அறிந்திருந்த நிலையில், வீட்டு வேலைகளுக்காக இருவரும் அடிக்கடி சந்தித்த நிலையில், பழக்கம் அதிகரித்து நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது...இதில், மருமகளின் நடத்தையில் சந்தேகமடைந்த வேல்முருகனின் தந்தையான சுப்பிரமணியனும், தாய் கொளஞ்சியும் மருமகளை நோட்டமிட்டு வந்துள்ளனர்...இதில், மகனுக்கு துரோகம் செய்து வேறொருவருடன் மருமகள் தகாத உறவில் இருப்பதை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த இருவரும் கீதாவை அழைத்து எச்சரித்துள்ளனர்...இந்த தகவல் வெளிநாட்டில் இருந்த கணவனுக்கும் தெரியவர, தாயகம் திரும்பி மனைவியை எச்சரித்த அவர், மனைவியை அவருடைய பெற்றோருக்கு வீட்டுக்கே அனுப்பி வைத்திருக்கிறார்...
இதில், கீதாவின் பெற்றோர் வேல்முருகனின் பெற்றோருடன் சமாதானம் பேச முயன்ற நிலையில் அவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர்...இந்நிலையில், வழக்கம்போல் தனது லீலைகளை ஆரம்பித்த கீதா, அதற்கு மாமனாரும், மாமியாரும் தடையாய் இருப்பதை அறிந்து தனது காதலனுடனே சேர்ந்து அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்...இதன்படி, மாமானார், மாமியாரின் சொந்த ஊரான இலங்கையூனூருக்கு சென்ற அவர், எல்லாம் மறந்தும், திருந்தியும் வாழ்வது போல் சமாதானம் பேசி நாடகமாடியிருக்கிறார்.... இதோடு நிற்காமல், நானே சமையல் செய்வதாக கூறிய கீதா, நன்கு மணக்க மணக்க முள்ளங்கி சாம்பாரை வைத்து அதில் எலி மருந்து பேஸ்ட் கலந்து மாமியார், மாமனாருக்கு பரிமாறியிருக்கிறார்....
அப்போது, கீதாவின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 10 வயது சிறுவனான தீபக்கும் அந்த சாப்பாட்டை சாப்பிட்டது தான் சோகம்...இதில், மூவரும் அடுத்தடுத்து உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்..... இதையறிந்து, அதிர்ச்சியடைந்த வேல்முருகன் வெளிநாட்டில் இருந்து திரும்பி போலீசில் புகாரளித்த நிலையில், ஒன்றரை வருடம் கழித்து அவருடைய மனைவி கீதா மற்றும் காதலன் ஹரிஹரனை போலீசார் கைது செய்துள்ளனர்...இதில், உயிரிழந்தவர்களின் உடற்பரிசோதனை அறிக்கை சற்று தாமதமாக கிடைத்ததாகவும், அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் தான் இருவரும் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தாக கூறப்படுகிறது....இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்...