கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற சிறுமி அவரது தந்தை உட்பட மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பள்ளப்பட்டியைச் சேர்ந்த சேக் பரித் அவரது மகள் மெளஃபியா உள்ளிட்ட 3 பேர், பண்ணப்பட்டி குடகனாற்று பகுதியில் உள்ள நீரில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சிறுமி மெளஃபியா நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட, அவரது தந்தை மற்றும் உறவினர் ரியாஜுதீன் ஆகிய இருவரும், சிறுமியை காப்பற்ற முயற்சி செய்தனர். ஆனால், மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மூவரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.