"பசுவின் கோமியத்தில் ஆபத்தான பாக்டீரியாக்கள்" - வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2023-04-11 16:01 GMT
  • பசுவின் கோமியத்தில் ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பதாக, இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த தொற்றுநோய் துறையின் தலைவர் போஜ் ராஜ் சிங் தலைமையில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
  • இதில், ஆரோக்கியமான பசு மற்றும் காளையின் சிறுநீரில், குறைந்தபட்சம் 14 வகையான தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • அதேசமயம், எருமையின் சிறுநீர் சில குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்களின் மீது மிகச் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பசுவின் கோமியத்தில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ளது என்ற பொதுவான நம்பிக்கை இருப்பதாகவும், ஆனால் எந்த ஒரு விதத்திலும் அது மனித நுகர்வுக்கு பரிந்துரைக்க ஏற்றதல்ல எனவும் போஜ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்