தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி... மாவட்ட ஆட்சியர் அம்ருத் பங்கேற்பு
ஊட்டியில் தினத்தந்தி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ருத் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் தினத்தந்தி பொது மேலாளர் ஆர்.தனஞ்செயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் அம்ருத், மாணவர்கள் இலக்கை அடைய கடின உழைப்பு தேவை என்றார். உயர்ந்த பதவிக்கு வர மாணவர்கள் கனவு காண வேண்டும் என்றும், நாளிதழ் படிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாணவர்கள் செல்போன் பயன்பாட்டை தவிர்த்து, படிப்பில் முழு கவனமும் செலுத்தினால் நல்ல இலக்கை அடைய முடியும் என்று கூறினார்.