கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பண மோசடி? - கண்ணீர் மல்க மனு கொடுக்க வந்த மக்கள்

Update: 2023-06-22 14:08 GMT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறி 500 பேரிடம் 50 லட்ச ரூபாய் பெற்று ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க மனு அளிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு "வென்ச்சர் டிரஸ்ட்" மூலமாக வீடு கட்டி தரப்படும் என்று கூறி கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக சென்னையைச் சேர்ந்த சபரி ராஜன் என்பவர் 500க்கும் மேற்பட்டவர்களிடம் 30 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளார்... ஆனால் இது நாள் வரை வீடு கட்டித் தரப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை சபரிராஜனை தொடர்பு கொண்டு கேட்டபோதும், முறையான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீசில் புகாரளிக்கப்பட்டது. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவிடம் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் புகாரளித்தனர். புகார் மனுவை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்