கரையை கடந்த சிட்ராங் புயல்...சூறையாடப்பட்ட 83 கிராமங்கள் - வெள்ளக்காடாக மாறிய சாலைகள்
கரையை கடந்த சிட்ராங் புயல்...சூறையாடப்பட்ட 83 கிராமங்கள் - வெள்ளக்காடாக மாறிய சாலைகள்
வங்கதேசத்தில் கரையை கடந்த சிட்ராங் புயலின் தாக்கம் அசாமிலும் எதிரொலித்தது. அந்தமான கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி வங்கதேசம் அருகே கரையை கடந்தது. அதனால் இந்தியாவின் வடமாநிலங்களில் புயலின் தாக்கம் இருந்தது. அசாமில் 83 கிராமங்கள் புயலின் கோர தாண்டவத்துக்கு பாதிக்கப்பட்டன. கடலோர பகுதிகளில் வீடுகள் சேர்ந்தமடைந்ததுடன், மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. புயலால் வீசிய சூறைக்காற்று மற்றும் கனமழையால் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.