திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் குவிந்த கூட்டம்...பக்தர்களிடையே கடும் தள்ளு முள்ளு - திக்கு முக்கு ஆடிய பணியாளர்கள்
திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் பக்தர்கள் குவிந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சனிக்கிழமையான இன்று திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில், திரளான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற கோயில் பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். பக்தர்களுக்கும், அவர்களுக்கும் கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனையொட்டி சனிக்கிழமைகளில் கூடுதல் போலீசாரை, கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.