டி20 உலகக்கோப்பை சூப்பர்-12 சுற்று- தஷ்கின் அஹமது அசத்தலில் வங்கதேசம் வெற்றி - நெதர்லாந்து போராடி தோல்வி

Update: 2022-10-24 14:20 GMT

குரூப்-2 பிரிவில் ஹோபர்ட் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஹொசைன் 38 ரன்கள் அடித்தார்.

பின்னர் பேட்டிங்கை தொடங்கிய நெதர்லாந்துக்கு, வங்கதேச பவுலர் தஷ்கின் அஹமது ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார்.

முதல் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை அவர் எடுத்த நிலையில், 4வது ஓவரில் மேலும் 2 விக்கெட்டுகளை ரன்-அவுட் மூலம் நெதர்லாந்து பறிகொடுத்தது.

எனினும் நெதர்லாந்து வீரர் அக்கர்மேன் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.

62 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் 135 ரன்னுக்கு நெதர்லாந்து ஆல்-அவுட் ஆனது.

இதன்மூலம், சூப்பர்-12 சுற்றில் முதல் முறையாக வங்கதேசம் வெற்றியைப் பதிவு செய்தது.

4 விக்கெட் வீழ்த்திய தஷ்கின் அஹமது ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்