"ஊழல், வாக்குவங்கி அரசியல் வேரோடு அகற்ற வேண்டும்" - பிரதமர் மோடி

Update: 2022-12-18 13:42 GMT

வன்முறை, ஊழல் மற்றும் வாக்கு வங்கி அரசியலை வேரோடு அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களில் 6 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். முன்னதாக ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழாவில் பங்கேற்ற அவர் உரையாற்றினார். அதில் ஊழல், உறவுமுறை அரசியல், வன்முறை, அரசின் திட்டங்களை முடக்குவது, வாக்குவங்கி அரசியல் உள்ளிட்டவற்றை தடுக்க முயற்சித்து வருவதாக தெரிவித்தார். எனினும், இவற்றின் வேர்கள் ஆழமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், தவறுகளை வேரோடு அகற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர், வடகிழக்கு மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தொடர்ந்து மேகாலயா முன்னேற்றத்திற்கான 4ஜி சேவை, வீடு, சாலை மற்றும் விவசாயம் சார்ந்த நலத்திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்