கும்பகோணம் அருகே மிகவும் பழமையான சிவன் கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
மேல காவிரியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் என்ற கோயில் ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான கோயில் என கூறப்படுகிறது.
கோயிலை பராமரிக்கும் விதமாக இங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின் காரணமாக நடைபெற்ற யாக சால பூஜையில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.