காஞ்சிபுரத்தில் பரபரப்பு - துணை வட்டாட்சியர் மனைவி தற்கொலை..? - ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு

Update: 2022-08-17 15:57 GMT

காஞ்சிபுரத்தில் குடும்பப் பிரச்சனை காரணமாக துணை வட்டாட்சியர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்திரமேரூர் தாலுக்கா அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணிபுரியும் சதீஷ் என்பவர் காதலித்து சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சதீஷ் மது போதைக்கு அடிமையானதால், இருவருக்கும் அவ்வப்போது தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்றும் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் சங்கீதா தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி சங்கீதா உயிரிழப்பு குறித்து கணவன் சதீஷிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் சங்கீதாவின் மரணத்தில் காஞ்சிபுரம்

ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்