திடீரென ஜக்கி குறித்து விசாரித்த பெண்... போலீசாருடன் வாக்குவாதம் - பரபரப்பு

Update: 2023-01-08 10:28 GMT

திடீரென ஜக்கி குறித்து விசாரித்த பெண்... போலீசாருடன் வாக்குவாதம் - பரபரப்பு


கோவை அருகே ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்து திடீரென பெண் ஒருவர், போலீசாரிடம் விசாரித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருட்டுப்பள்ளம் வனச்சரக அலுவலகம் அருகே அந்த பெண், ஆலாந்துறை போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் விசாரணையில், அவர், கர்நாடகவைச் சேர்ந்த ஸ்ருதி என்பது தெரியவந்தது. பின்னர், அந்தப் பெண்ணை அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்