வெள்ளத்தில் மீன் பிடித்து மகிழ்ந்த பொது மக்கள்..!

Update: 2022-12-12 04:05 GMT

மாண்டஸ் புயல் கரை கடந்த நிலையில் வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது.

இதனால் பாலாற்றின் கிளை ஆறுகளிலும், பாலாற்றிலும் நீர்வரத்து அதிகரித்தது. விரிஞ்சிபுரம் பாலாறு மற்றும் வேலூர் பாலாறுகளிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் பொதுமக்கள் குளிக்கவோ துணிகளை துவைக்கவோ மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் விரிஞ்சிபுரம் பாலாற்றில் அப்பகுதி மக்கள் மீன் பிடித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்