நண்பன் வீட்டிற்கு கல்லூரி தோழியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் - மாணவி வீடு திரும்பியதும் பெற்றோர்

Update: 2022-10-04 06:59 GMT

நண்பன் வீட்டிற்கு கல்லூரி தோழியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் - மாணவி வீடு திரும்பியதும் பெற்றோர் 


கன்னியாகுமரி அருகே கல்லூரி மாணவியை சக மாணவனே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண், கன்னியாகுமரியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.அதே கல்லூரியில் படித்த சின்ன முட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞருக்கும் அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில், வீடு திரும்பிய மாணவி, தன்னுடன் படித்த இளைஞர் ஒருவர், நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, அந்த மாணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்