அழுகுரலாக மாறிய ஆட்சியர் அலுவலகம்.. குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்கள் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

Update: 2023-02-09 05:29 GMT

கோரிக்கை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோ மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆட்சியர் முதல் அலுலர்கள் வரை மெத்தனமாக இருப்பதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், மாலை 3 மணி வரை பசியுடன் காத்திருந்து மனுக்கள் அளிப்பதாக வேதனை தெரிவித்தனர். இதனிடையே, குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் அதிகாரிகளின் அலட்சியப்போக்கை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக அவர்களை மீட்ட போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக, கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் அலைகழிக்கப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்