திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்ளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூருக்கு மாற்றப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக இருந்த வளர்மதி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அமர் குஷாவா, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மண்டலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.