பரோட்டாவில் கரப்பான் பூச்சி...சாம்பாரில் புழு | அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்
கேரள மாநிலம் இடுக்கியில் பரோட்டாவில் கரப்பான் பூச்சியும், சாம்பாரில் புழுவும் இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கட்டப்பனா சந்தை பகுதியில் பார்சல் வாங்கிய பெண் ஒருவர், வீட்டிற்கு சென்று பிரித்து பார்த்த போது கரப்பான் பூச்சி, புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து , உணவகத்தில் சோதனையிட்ட அதிகாரிகள் கடைக்கு பூட்டுப்போட்டனர்.