"10 நிமிடத்துக்கு ஒருமுறை மூடப்படும்.. அடுத்தடுத்து பல உயிர்கள் பறிக்கப்படும்" - மதுரையை உலுக்கி எடுக்கும் துயரம்

Update: 2023-07-15 03:36 GMT

இன்றைய மாவட்ட ஸ்பெஷல் தொகுப்பில், மதுரை திருமங்கலம் நகர் பகுதியில் மேம்பாலம் அமைக்கப் படாததால், ரயில்வே கேட் மூடப்பட்டு போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் படும் துயரை விரிவாக பார்க்கலாம்

மதுரை மாவட்ட மக்களின் அன்றாட பிரச்சனை லிஸ்டில் முதலிடம் பிடிக்கிறது திருமங்கலம் ரயில்வே கேட் போக்குவரத்து நெரிசல். ரயில்வே கேட்டை கடப்பது என்பது திருமங்கல மக்களின் அன்றாட ரியல் லைப் டாஸ்க்..

திருமங்கலத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் நாள் ஒன்றுக்கு 40 முறைக்கு மேல் மூடப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால், விடத்திக்குளம், ஆலங்குளம், கற்பக நகர் உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக் கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் சுமார் 10 முதல்15 நிமிடத்திற்கு மேல் கேட் மூடப்படுவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர், அவசர வேலைகளுக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் படாதபாடு பட்டு வருகின்றனர்.

எங்கே கேட்டை மூடி விடப்போகிறார்கள் என்ற அச்சத்தில், கேட் மூடுவதற்குள் ட்ராக்கை கடந்துவிட நினைத்து அந்த இடத்தை மிக வேகமாக கடக்க முயன்று விபத்தில் சிக்கு பவர்கள் ஏராளம்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த முத்துக்காளை கூறும் போது, அவசரத்திற்காக நகரிலிருந்து வெளியேறுவதே பெரும் சவாலாக இருப்பதாக தெரிவிக்கிறார்...

"10 -15 நிமிடத்திற்கு ஒருமுறை கேட் மூடப்படுகிறது"

"கடும் சிரமத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள்"

"அவசரத்திற்கு எங்கும் செல்ல முடியவில்லை "

அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் கூட சென்று திரும்ப முடியாததால் நோயாளிகள் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருவது அவலத்தின் உச்சம்...

சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடிய மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக விரைந்த ஆம்புலன்ஸ் திருமங்கலம் அருகே ரயில்வே கேட் மூடப்பட்டதால் நெரிசலில் சிக்கியது.

சுமார் 20 நிமிடங்களாக நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியிருந்த நிலையில், இருசக்கர வாகனம் மூலம் மாணவியை பெற்றோர் அழைத்து வந்து ஆம்புலன்சில் ஏற்றியுள்ளனர்.

காலமதாமதமாக மருத்துவமனைக்கு சென்றதால் வழியிலே யே மாணவி உயிர் பிரிந்தது. இது போல், பல துயர சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக வேதனை தெரிவிக்கிறார் உள்ளூர் வாசியான சரவணன்.

"அவசரமாக மருத்துவமனைக்கு செல்வதில் சிரமம்"

"ரயில்வே கேட் போடப்பட்டதால் பல உயிர் பறிபோகியுள்ளன"

"உடனடியாக பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை"

இந்த பிரச்சனை இன்று நேற்றல்ல 15 ஆண்டுகலாக தொடர்வதாக வேதனை தெரிவிக்கும் திருமங்கலம் பகுதி மக்கள், பலமுறை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப் பட்டாலும், தற்போது வரை பணிகள் தொடங்கிய பாடில்லை என்கின்றனர் ஏக்கத்தோடு.

சௌந்திரபாண்டியன், ஓய்வுபெற்ற போலீஸ்

"30 நிமிடம் முன்கூட்டியே புறப்பட வேண்டிய நிலை"

"உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை"

மேம்பாலம் ஒன்றே நிரந்தர தீர்வு என்ற நிலையில்,பாலம் அமைக்க ஒப்பந்தபுள்ளி கோரப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

திருமங்கலம் ரயில்வே கேட் பகுதியில், விரைந்து மேம்பாலம் அமைத்து உயிர்பலிகளை தடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்