இலங்கையில் சீன உளவு கப்பல்... | இந்தியாவிற்கு சீனா கண்டனம்
இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பல் யுவாங் வாங்-5 வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியா தேவையற்ற அழுத்தங்களை இலங்கைக்கு கொடுப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் வென்பின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான செயற்பாடுகளுக்கு தொந்தரவு செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என்ற அவர், இரு நாடுகளுக்கு இடையிலான இந்த ஒத்துழைப்பு செயற்பாடுகள் மூன்றாம் தரப்பினரை இலக்காகக் கொண்டது அல்ல என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, உளவு கப்பல் வருகையை ஒத்தி வைக்குமாறு, சீன தூதரகத்திடம் இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது. இதனை, இலங்கை வெளியுறவுத்துறை அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.