விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில், 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இலவசமாக ஐபிஎல் போட்டியை கண்டு களித்தனர். நேற்று, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் அணியை, 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. இதனிடையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த செலவில், சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் போட்டியைக் காணும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார். சிறுவர்கள் அனைவரும் உற்சாகமாக போட்டியைக் கண்டனர்.