மாமல்லபுரத்தில் 45 அடி உயரத்தில் சிற்பத்தூண் - இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Update: 2022-07-27 04:48 GMT

மாமல்லபுரம் நகரம் யுனெஸ்கோவால் அஙகீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னங்கள் உள்ள முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் நுழைவு வாயில் பகுதியில் 45 அடி உயர சிற்பத்தூண் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தூணின் நான்கு புறமும் நவீன பிளாஸ்டர் பாரிஸ் மூலம் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தூணின் கீழ் பகுதியில் நான்கு புறமும் குட்டியுடன் கூடிய யானை சிற்பமும், தூணின் மத்திய பகுதியில் மயில் தோகையை விரித்து ஆடுகின்ற வகையில் மயில் சிற்பமும், தூணின் ஊச்சி பகுதியில் சிங்கம் சிற்பமும் அழகுர அமைக்கப்பட்டுள்ளது. இதன் 100 சதவித பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாளை செஸ் ஒலிம்பியாட் தொடங்க உள்ள நிலையில் இந்த சிற்ப தூணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்