வடமாநிலத்தவர் ஆசன வாயில் குழாயை செலுத்தி காற்று அடித்ததால் துடிதுடித்து பலி - சென்னை அருகே பயங்கரம்

Update: 2023-03-20 04:54 GMT
  • திருவள்ளூர் மாவட்டத்தில் சுத்தம் செய்யும் காற்று குழாயை ஆசன வாயிலில் வைத்து இயக்கியதில் வட மாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • சென்னையை அடுத்த பெரியபாளையம் அருகே ஆலம்பாக்கம் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் ஒடிஸாவை சேர்ந்த செளமியா பிரியரஞ்சன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
  • சம்பவத்தன்று, செளமியா பிரிய ரஞ்சனின் ஆசன வாயிலில், ஆந்திராவை சேர்ந்த சாய் ராகவா என்பவர் சுத்தம் செய்யும் காற்று குழாயை வைத்து இயக்கியதாக கூறப்படுகிறது.
  • இதனால், வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிய ரஞ்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • இதையடுத்து, ஆந்திர மாநில தொழிலாளி சாய் ராகவாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்