சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர் கழுத்தில் குத்திய நோயாளி - ஸ்டிரைக்கில் இறங்கிய சக டாக்டர்கள்

Update: 2023-05-30 03:37 GMT

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை நோயாளி ஒருவர் கத்தரிக்கோலால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருபவர் சூர்யா. இவரிடம், பலாஜி என்ற உள்நோயாளி, தனது கையில் போடப்பட்டிருந்த ஐ.வி. ஊசியை அகற்றக் கோரி வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதோடு, மருத்துவப் உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கத்தரிக் கோலை கொண்டு சூர்யாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மருத்துவர் சூர்யா, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்த‌த்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என கூறியதோடு, உள்நோயாளி பாலாஜி கைது செய்யப்பட்டதாக தெரிவித்ததால், போராட்டத்தை பயிற்சி மருத்துவர்கள் கைவிட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்