சென்னையில் இரவில் கொட்டும் மழையிலும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
சென்னையில் இரவு முதல் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், சாலைகளில் கிடக்கும் குப்பைகளால் மழைநீர் தேங்காவாதவாறு தூய்மைப் பணியாளர்கள் கொட்டும் மழையிலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள வடிகால்களில் மழைநீர் தடையின்றி செல்வதற்கு தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.