உராங்குட்டான் குரங்குகள் கடத்தியவர்களை ரிலீஸ் செய்த காவலர்கள் மீது பாய்ந்த வழக்கு
- சென்னையில் உராங்குட்டான் குரங்குகள் கடத்தலில், கடத்தல்காரர்களுக்கு ஆதராவாக செயல்பட்டதாக கூறி 4 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- சென்னை செங்குன்றம் காவல்நிலையத்தில் அரியவகை உயிரினமான உராங்குட்டான் குரங்குகள் கடத்தல் வழக்கில், காவலர்கள் பணம் பெற்றுக்கொண்டு கடத்தல்காரர்களை வெளியே விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், காவலர்கள் லஞ்சம் வாங்கியதும், நிலமோசடி மற்றும் கட்டபஞ்சாயத்துகளில் ஈடுபட்டதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
- இந்நிலையில், சென்னை செங்குன்றம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அசோக் மற்றும் காவலர்கள் வல்லரசு, மகேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம் செய்து ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.