சென்னை கலாஷேத்ரா விவகாரம்... வாபஸ்-க்கு பின் ரகசிய விசாரணை ஏன்? - புயலை கிளப்பிய மகளிர் ஆணைய தலைவர்

Update: 2023-03-30 07:44 GMT
  • சென்னை அடையாறு கலாக்ஷத்ராவில் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்கக் கூறியதை வாபஸ் பெற்ற நிலையில், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரகசியமாக 3 மணி நேரம் விசாரணை நடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • கலாக்ஷத்ராவில் பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவிகள் பேசிக்கொண்ட விவகாரம் சமூக ஊடங்களில் வெளியானது.
  • இதுகுறித்து, கலாக்‌ஷேத்ரா இயக்குனரிடமும், குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியரிடமும் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்திருந்தது.
  • இதற்கிடையே, தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி சிலர் பொய்யான தகவலை பரப்பியதாக மாணவி ஒருவர் சென்னை காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.
  • இந்நிலையில் தமிழக டிஜிபிக்கு பிறப்பித்த உத்தரவை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப்பெற்றது.
  • இந்த நிலையில், டெல்லியில் இருந்து வந்த தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா, அடையாறு கலாக்ஷேத்ராவில் நேற்று 3 மணி நேரம் ரகசியமாக விசாரணை நடத்தினார்.
  • எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர், விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்