சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடல் ...! வழக்கறிஞர்கள் நுழையவும் தடை...காரணம் என்ன..?
பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் சம்பிரதாயப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் 24 மணி நேரம் மூடப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு, 150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் சென்னை உயர் நீதிமன்ற கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் சென்னகேசவ பெருமாள் கோவில், சென்ன மல்லேஸ்வரர் கோவில் என இரு கோவில்கள் இருந்ததாகவும், அந்த கோவில்களுக்கு மாற்று இடம் வழங்கி, இங்கு உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் உயர் நீதிமன்ற வளாகம் கோவிலுக்கு சொந்தமானது என்பதை வலியுறுத்த ஆண்டுக்கு ஒரு நாள் மூடப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. இன்னும் பல கோயில்களுக்கு சொந்தமான இடம் இதுவென்று கட்டுக்கதைகளும் உலவுகின்றன.