சென்னை பெண்ணுக்கு அசாமில் பயங்கரம்...காதலர் தினத்தில்.. சொகுசு அறையில்..'மாஸ்டர்' பட பாணியில் கொன்ற ராணுவ அதிகாரி - போலீசுக்கு துப்பு தந்த 'கடவுள்'

Update: 2023-02-27 06:55 GMT
  • அசாம் மாநிலம்... காம்ரூப் மலைப்பகுதி... அடர்ந்த வனம்... சாலை ஓரம் புதர்களின் நடுவே ரத்தம் தோய்ந்த பிளாஸ்டிக் பைக்குள் இளம்பெண்ணின் சடலத்தை கண்டறிந்தனர் காவல்துறையினர்...
  • சல்லடை போட்டு சலித்தும் கூட போலீசாருக்கு துப்பு கிடைக்கவில்லை... பிறகு தான் கடவுளே உதவி செய்தது காவல் துறைக்கு... ஆம்... இளம்பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த சாமி டாலர், கோவையில் உள்ள மாலிங்க பைரவி கோயிலில் வழங்கப்பட்டது என போலீசாருக்கு தெரியவந்தது.
  • அந்தக் கோயிலில் டாலர்களை வாங்கிச் சென்ற அனைவரின் விவரங்களையும் சேகரித்தனர் அசாம் போலீசார்... சிசிடிவி காட்சிகளும் ஆராயப்பட்டன...
  • அப்போது தான் தெரிந்தது சென்னையைச் சேர்ந்த 36 வயது இளம்பெண் வந்தனா ஸ்ரீ தான் அந்த டாலருக்கு சொந்தக்காரர் என்பது. வயதான தாய் தந்தையிடம் வாரணாசிக்கு செல்வதாக கூறிவிட்டு தனது 4 வயது கைக்குழந்தையுடன் சென்ற வந்தனா ஸ்ரீ, அதன் பின் வீடு திரும்பவில்லை.
  • வந்தனா ராணுவ லெப்டினண்ட் கர்னல் ஒருவருக்கு 138 முறை தொடர்ந்து கால் செய்ததும், ஏன்...கொலை செய்யப்படுவதற்கு முன்பாக கூட இருவரின் செல்போன் நம்பர்களும் சில நாட்கள் ஒரே சிக்னலில் பதிவானதும் தெரியவந்தது..
  • விசாரித்ததில் சம்பந்தப்பட்டது ராணுவ லெப்டினண்ட் கர்னல் அம்ரேந்தர் சிங் வாலியா என்பது கண்டறியப்படவே, அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகின...
  • சென்னையில் தன் பெற்றோருடன் வசித்து வந்த வந்தனா... அவர் லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்த போது வந்தனாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது... பிறகு அந்த ஜோடி பிரிந்து, அந்த நபரிடம் பணம் கேட்டு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் வந்தனா...
  • இதனிடையே சமூக வலைதளம் மூலமாக அவருக்கு அமரேந்தர் சிங்குடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது... அடிக்கடி அசாம் சென்று அமரேந்தரை சந்தித்தும் வந்துள்ளார் வந்தனா...
  • இந்த நிலையில் தான் வாரணாசி கோயிலுக்கு செல்வதாக கூறி விட்டு கடந்த ஜனவரி 31ம் தேதி 4 வயது குழந்தையுடன் அசாம் கிளம்பிய வந்தனா, தலைநகர் கவுகாத்தியில் அமரேந்தருடன் சொகுசு விடுதியில் அறை எடுத்து ஒன்றாக தங்கியுள்ளார்...
  • பிப்ரவரி14... உலகமே காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருந்த நேரம் அது... அப்போது தான் அசாமில் நிகழ்ந்தது அந்த கொடூரம்...
  • வந்தனா-அமரேந்தர் இடையே திருமணம் குறித்த பேச்சுவார்த்தை சண்டையில் முடிய, அமரேந்தர் தன் கையில் அணிந்திருந்த காப்பைக் கொண்டு வந்தனாவின் கழுத்தில் ஓங்கி குத்தியதில், கழுத்து எலும்பு உடைபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரை விட்டார் வந்தனா...
  • கொலையை மறைக்க வந்தனாவின் உடலை பிளாஸ்டிக் பையில் சுருட்டி தனது வாகனத்திலேயே கொண்டு சென்று காம்ரூப் பகுதியில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்அமரேந்தர்...
  • தாயை இழந்து பரிதவித்த அந்த ஏதும் அறியா பிஞ்சுக் குழந்தையை அழைத்து சென்று கொல்கத்தா ரயில் நிலையத்தில் மனசாட்சியே இன்றி விட்டுச் சென்றுள்ளார் அமரேந்தர்...
  • அங்குள்ள குழந்தைகள் நல அமைப்புகள் அந்தக் குழந்தையை மீட்டு பத்திரமாக காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்...
  • தங்கள் மகள் கொல்லப்பட்ட செய்தியை கேட்டு கலங்கிப் போன வந்தனாவின் பெற்றோர், அசாமுக்கு சென்று அங்கேயே அவரது உடலை அடக்கம் செய்துள்ளனர்...
  • மேலும் தங்கள் பேத்தியை காப்பகத்தில் இருந்து மீட்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வயதான தம்பதி...
  • காதலர் தினத்தன்று தன் காதலனைக் கரம் பிடிக்க நினைத்த இளம்பெண்ணின் கனவுகள் அவருடனே புதைக்கப்பட்ட சம்பவம், நிச்சயம் ஜீரணிக்க முடியாத சோகம்தான்!
Tags:    

மேலும் செய்திகள்