புதிதாக 24 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு
- தமிழ்நாட்டில் மேலும் 24 இடங்களில் காற்று தர கண்காணிப்பு நிலையங்களை அமைக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது
- .தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 34 இடங்களில் தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
- இந்நிலையில மேலும் 24 இடங்களில் இதுபோன்ற நிலையங்களை அமைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
- தருமபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, கும்பகோணம் உள்ளிட்ட 24 இடங்களில் இந்த காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
- இந்தக் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் மூலம் நிகழ் நேரத்தில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.