"கொரோனாவிற்கு பின் மாணவர்களிடம் ஏற்பட்ட மாற்றம்" - ஐஐடி இயக்குனர் காமகோடி வேதனை

Update: 2023-03-15 16:35 GMT

கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின்னர் மாணவர்கள் மனநிலையை தெளிவு படுத்துவது சவாலாக இருப்பதாக ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். சமூகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகளை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஐஐடி இயக்குனர் காமகோடி, அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஐஐடி இயக்குனர் காமகோடி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஐஐடி வளாகத்தில் மூன்று தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாகவும், பொருளாதார பிரச்சனை, உடல் பாதிப்பு என வெவ்வேறு காரணங்களால் தற்கொலைகள் நிகழ்ந்ததாகவும் கூறினார். மேலும், கொரோனா காலத்திற்கு பிறகு மாணவர்களை ஒன்றிணைப்பதும், மனநிலையை தெளிவுபடுத்துவதும் சவாலாக இருப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்