ஜூலை 13 -ல் விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 - இடியே விழுந்தாலும் இந்த முறை டார்கெட் மிஸ் ஆகாது

Update: 2023-07-02 02:34 GMT

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 திட்டத்தை சுமார் 615 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த, கடந்த 2020-ம் ஆண்டு இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி, கடந்த 3 ஆண்டுகளாக இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம், ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம், வரும் 13-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்காக செமி கிரையோஜினிக் பவர்கெட் இஞ்சின், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும வளாகத்தில் தயாரிக்கப்பட்டு, சோதனை ஓட்டம் 4 வினாடிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும வளாகத்தில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் வளாக இயக்குநர் ஆசீர் பாக்கியராஜ், இஸ்ரோ தொழிநுட்ப பணியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நிர்ணயித்தபடி 4 விநாடிகள் வெற்றிகரமாக சோதனை நடைபெற்றதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்