வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் கசிய வாய்ப்பு...'பேராபத்து..' - ஐநா எச்சரிக்கை

Update: 2023-04-27 08:38 GMT

சூடானில் துணை ராணுவ பிரிவானது உயிரியல் ஆய்வகத்தைக் கைப்பற்றிய நிலையில் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.அந்நாட்டில் ராணுவத்திற்கும் துணை ராணுவ படைக்கும் இடையே கடும் மோதல் தொடர்ந்து வருகிறது. மோதலில் ஈடுபட்டுள்ள துணை ராணுவத்தின் ஒரு பிரிவு தலைநகர் கார்டூமில் உள்ள உயிரியல் ஆய்வகத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும், இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஐநா எச்சரித்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது என்றும், ஏனெனில் ஆய்வகத்தில் போலியோ, தட்டம்மை, காலரா மாதிரிகள் உள்ளதாகவும் ஐநா கூட்டத்தில் பேசிய சூடானுக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி நிமா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்