பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - வீடியோ வெளியிட்ட பெண் மருத்துவர்

Update: 2023-05-12 01:48 GMT

மருத்துவர்களின் உயிரும், பாதுகாப்பும் முக்கியம் என கேரள பெண் மருத்துவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஜானகி ஓம் குமார், கொல்லம் கொட்டாரக்கரையில் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை குறிப்பிட்டு வேதனை தெரிவித்துள்ளார். இரவு நேரத்தில், மருத்துவர்கள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். பொதுமக்கள் ஆரோக்கியமாக இருக்க, மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்ற ஜானகி, அதனால், தங்களது உயிரும் பாதுகாப்பும் முக்கியம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்