திருச்செந்தூர் சென்று திரும்பிய கார் கவிழ்ந்து பயங்கர விபத்து - 4 வயது சிறுவன் ஸ்பாட்டிலேயே துடிதுடித்து பலி
திருச்செந்தூருக்குச் சென்று முடி காணிக்கை செய்து திரும்பிய கார் விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பாண்டிச்சேரியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது 4 வயது மகனுக்கு முடி காணிக்கை செலுத்த திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு குடும்பத்தாருடன் காரில் சென்றுள்ளார். கோவிலில் முடி காணிக்கை செலுத்தி, சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய போது, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே நவ்வலடி பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் கார் மோதி, பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் முடி காணிக்கை செலுத்திய 4 வயது சிறுவன், மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் பலரும் பலத்த காயம் அடைந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த உவரி போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து, அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.