தமிழில் சி.ஏ.பி.எப்.தேர்வு -முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

Update: 2023-04-15 14:12 GMT
  • சி.ஏ.பி.எப் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதை முழு மனதுடன் வரவேற்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா-விற்கு, தான் எழுதிய கடிதத்தின் விளைவாக, சி.ஏ.பி.எப்.தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது -
  • மத்திய அரசின் முடிவை, தான் முழு மனதுடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அனைத்து அரசு தேர்வுகளிலும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் வினாத்தாள்களை வழங்குவதற்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்