வீட்டு பாத்ரூம்களில் கேன் கேனாக கள்ளச்சாராயம்.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு.. அதிர்ச்சி வீடியோ
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் கள்ளச் சாராய விற்பனை தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி மலையடிவார கிராமங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். கல்வராயன் மலையில் உள்ள சேராப்பட்டு, கீரிப்பள்ளி, அத்திகுழி உள்ளிட்ட பல கிராமங்களில் வீட்டின் குளியலறையில் கேன்களில் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்து விற்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.