சிறையில் இருந்து வெளி வந்தவர் செய்த பகீர்.. டாக்சி ஓட்டுநர்கள் தான் டார்கெட்.. போலீசுக்கே டிமிக்கி..சென்னையில் பயங்கரம்

Update: 2023-07-16 05:24 GMT

கால் டாக்சி ஓட்டுநர்களை மட்டும் குறி வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவர் காவல் துறையிடம் பிடிபட்டார்..

தென்னிந்தியாவின் நம்பர் 1 மருத்துவர் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு டாக்சி ஓட்டுநர்களைக் குறி வைத்து பல ஆண்டுகளாக கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சஞ்சய் வர்மா என்பவர் மோசடி செய்து வந்துள்ளார்... சென்னையில் கால் டாக்சி ஓட்டுநராகப் பணியாற்றும் ஆந்திராவைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சஞ்சய் வர்மாவை போலீசார் கைது செய்தனர். காவல் துறையிடமும் இவர் தன்னை ஒரு ஆயுர்வேத மருத்துவர் என கூறிய நிலையில், விசாரணையில் இவர் போலி மருத்துவர் என்பது தெரிய வந்தது. பகட்டான தோற்றம், மற்றும் பேச்சால் சஞ்சய்-ஐ மருத்துவர் என்றே ஓட்டுநர்களும் நம்பியுள்ளனர். காரில் பயணிக்கும் போது பணத்தேவை இருப்பதைப் போல் செல்போனில் உரையாடி, ஓட்டுநரிடம் தன் கையில் பணம் இருப்பதாகவும், ஜி பே இல்லாததால் தான் சொல்லும் நபருக்கு பணம் அனுப்பினால், கையில் பணத்தைத் தந்து விடுவதாகவும் கூறியுள்ளார்... பணத்தை பறித்ததும் நல்ல ஸ்டார் ஓட்டலில் வண்டியை நிறுத்தக் கூறி அங்கு ஓட்டுநரையும் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைத்து, அவசரம் எனக்கூறி ஓட்டுநரின் செல்போனை வாங்கிக் கொண்டு, கவனத்தைத் திசை திருப்பி அங்கிருந்து தப்பிச் செல்வதை சஞ்சய் வழக்கமாக வைத்துள்ளார். சென்னையில் மட்டும் 33 இடங்களில் நூதன முறையில் மோசடி செய்த இவர் கேரளாவில் சிறையில் இருந்து விட்டு 4 மாதங்களுக்கு முன்பு தான் வெளியே வந்துள்ளார். மோசடி செய்த பணத்தில் சஞ்சய் உல்லாச வாழ்க்கை அனுபவித்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்