"Drop" செய்வதாக கூறி பக்கத்து வீட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரம்..!

Update: 2023-04-25 14:32 GMT

சம்பவம் நடந்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு கிளம்பிய சிறுமி H.P.F பகுதியில் பேருந்திற்காக காத்திருந்திருக்கிறார். அப்பொழுது அந்த வழியாக காரில் சென்றுக்கொண்டிருந்த ரஜ்னேஷ் சிறுமியை வீட்டில் ட்ராப் செய்துவிடுவதாக அழைத்திருக்கிறார். அந்த சிறுமியும் ரஜ்னேஷ் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் என்பதால்நம்பி அவரின் வண்டியில் ஏறி இருக்கிறார்.

ஆனால், அன்று மாலை வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை, சந்தேகமடைந்த பெற்றோர் பள்ளியிலும், பல இடங்களிலும் தேடி அழைந்திருக்கிறார்கள்.அப்பொழுது சிகப்பு நிற சட்டை அணிந்தவரோடு சிறுமி காரில் வனபகுதியை நோக்கி சென்றது தெரியவந்திருக்கிறது. உடனடியாக வனப்பகுதியை சுற்றி தேடிய போது சிறுமி பள்ளிக்கு கொண்டு சென்ற புத்தகபை முதலில் கிடைத்திருக்கிறது.

அதே நேரம் வனபகுதிக்குள் இருந்து ரஜ்னீஸ் காரில் வேகமாக வந்திருக்கிறார் சந்தேகமடைந்த ஊர்காரர்கள் அவரின் வாகனத்தை வழிமறித்து விசாரித்திருக்கிறார்கள். ஊர்க்காரர்களிடம் ரஜ்னீஸ் தொடர்ந்து முன்னுக்குபின் முரணான பதில்களை தெரிவித்து கொண்டிருந்த போதே, வனப்பகுதியிலிருந்து சிறுமி மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட ரஜ்னீஸ் ஒட்டுமொத்த ஊரின் கவனத்தையும் திசை திருப்பிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றிருக்கிறார்.உடனடி ஆக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள், ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவர உறவினர்கள் அரந்துப்போயிருக்கிறார்கள்.

சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோர்களிடம் ஓப்படைத்த போலீசார், கொலையாளி ரஜ்னேஷை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ரஜ்னேஷுடன் வேறு யாரேனும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தார்களா ? என்கிற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்