அண்ணன் மகளை காதலித்ததால் ஆத்திரம்..கல்லூரி மாணவனை வெட்டி சாய்த்து கொடூரம் -விழுப்புரத்தில் அதிர்ச்சி
- விழுப்புரம் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
- விழுப்புரத்தை அடுத்த கப்பூரைச் சேர்ந்த முனியன் மகன் ராஜன் என்கிற ராமன் என்பவர், விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
- அவர், காணை அருகே ஒருகோடி என்ற கிராம எல்லையில், தலையில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
- தகவலறிந்து சென்ற விழுப்புரம் மற்றும் காணை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தொடர்ந்து நடத்திய விசாரணைக்குப் பிறகு, அதே பகுதியைச் சத்யராஜ், கார்த்திக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
- சத்யராஜின் அண்ணன் மகளை ராஜன் காதலித்ததால், அவரை தனது நண்பருடன் சேர்ந்து சத்யராஜ் கொலை செய்ததாக கூறப்படுகிறது தெரிகிறது.
- இதுதொடர்பாக, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.