இறந்த கணவனுக்கு உயிர் கொடுத்த மனைவி.. வெண்கல சிலையாக வந்த கணவன் - மனைவியின் நெகிழ்ச்சி செயல்

Update: 2022-10-16 05:51 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், இறந்த கணவருக்கு வெண்கலத்தில் சிலை வைத்து மனைவி மற்றும் குடும்பத்தினர் வழிபட்டது காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர், மூவேந்தர் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பில் மாநில துணைத் தலைவராக பொறுப்பு வகித்த போது, பொது மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் 15 ஆம் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் O.S.M.R என்ற பெயரில் டிரஸ்ட் அமைத்து பல்வேறு உதவிகள் செய்து வந்தனர். இந்நிலையில் ஒச்சாத்தேவரின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் O.S.M.R என்ற பெயரில் டிரஸ்ட் அமைத்து ஏழை எளிய பொதுமக்களுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

உயிரிழந்த ஒச்சாதேவர், குடும்பத்தை வழி நடத்தி செல்வதாக நம்புவதால், வெண்கலத்தில் சிலை வைத்து வழிபட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்