ஆவின் பாலில் புழு இருந்ததாக வீடியோ வெளியான நிலையில், அதற்கு மாதவரம் மத்திய பால்பண்ணை துணை பொது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஆவின் பாக்கெட் பாலில் புழு இருப்பதாக வீடியோ வெளியிட்டிருந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கடை, காலி பால் பாக்கெட், பாலின் தன்மை குறித்து உடனடியாக ஆய்வு செய்யப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
அதில், பால் பாக்கெட்டின் வெளிப்புறத்தில் ஒட்டி இருந்து பாத்திரத்தில் புழு விழுந்திருக்க வாய்ப்புள்ளதாக பால்பண்ணை அதிகாரி கூறியுள்ளார்.
இரண்டு நுண் வடிகட்டிகளால் வடிகட்டப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்படும் பாலில் புழு இருக்க வாய்ப்பே இல்லை எனவும்
பாக்கெட்டில் இருக்கும் போதே பாலில் புழு இருப்பதாக வீடியோ வெளியிட்டவர் கூறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மளிகை கடையில் இருந்தோ அல்லது டப்புகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்து அதில் புழுக்கள் உற்பத்தியாகி பால் பாக்கெட்டின் வெளிபுறத்தில் ஒட்டியிருக்கலாம் என மாதவரம் மத்திய பால்பண்ணையின் துணை பொது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.