மாணவியை நிர்வாண வீடியோ எடுத்த காதலன்.. வீடியோவை காட்டி மிரட்டி பகீர் சம்பவம்

Update: 2022-08-20 08:56 GMT

ராமநாதபுரம் அருகே பள்ளி மாணவியை மிரட்டி அத்துமீறிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சேர்ந்தவர் திலீப். கூலித் தொழிலாளியான இவருக்கு ப்ளஸ் 2 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த மாணவியிடம் அத்துமீறியிருக்கிறார் திலீப்.

அப்போது அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்ட திலீப், ஒரு கட்டத்தில் அதை காட்டியே தொடர்ந்து அவரை மிரட்டி அத்துமீறி உள்ளார். மேலும் மாணவியிடம் இருந்து நகைகளையும் திலீப் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தரப்பு அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்கில் திலீப்பை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்