கேரளாவை அதிரவைத்த காதலன் செயல் - லாட்ஜில் ரத்த வெள்ளத்தில் மிதந்த காதலி

Update: 2023-05-12 13:40 GMT

திருச்சூர் போஸ்ட் ஆபிஸ் சாலையில் உள்ள தனியார் விடுதியில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முனிகா கிஷ்கு என்ற பெண்ணும், ஒடிசாவை சேர்ந்த பெசேஜா என்ற இளைஞரும், அறை எடுத்து தங்கினர். விடுதியை விட்டு இளைஞர் மட்டும் தனியாக வெளியே சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வராததால், சந்தேகமடைந்த ஊழியர்கள், மாற்று சாவியை வைத்து அறையை திறந்துள்ளனர். அப்போது, ரத்த வெள்ளத்தில் இளம்பெண் முனிகா, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தலைமறைவான ஒடிசா இளைஞர் பெசேஜாவை கைது செய்து விசாரித்தனர். அதில், இருவருக்கும் இடையேயான வாக்குவாதத்தின் போது, ஆத்திரத்தில் முனிகாவை கொலை செய்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்