இன்ஜினில் இருந்து வெளியேறிய கரும்புகை... நடுரோட்டிலேயே தீப்பற்றி எரிந்த கார் - அதிர்ச்சி காட்சிகள்
கோவை மேட்டுப்பாளையத்தில், திடீரென கார் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் இருந்து ஊட்டியை நோக்கி, காரில் 3 இளைஞர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். காரானது, கல்லார் அருகே சென்று கொண்டிருந்த போது, அதன் முன்பகுதியிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனால் அச்சமடைந்த 3 பேரும், காரை விட்டு உடனே இறங்கினர். இறங்கிய சிறிது நேரத்திலேயே கார் மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது. பின்னர் தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்த நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.