ஆளுநருக்கு கருப்பு கொடி.. விருதுநகரில் பரபரப்பு | RNRavi | Virudhunagar
தமிழக ஆளுநர் ரவி வருகைக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இராஜபாளையம் தனியார் கல்லூரி பொன்விழாவை முன்னிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்தார் ஆளுநர் ரவி. அப்போது, ஆன்லைன் ரம்மி தடை, நீட் தடை ஆகியவற்றிற்கு நடவடிக்கை எடுக்காததைக் குறிப்பிட்டும், மார்க்ஸ்சை இழிவாக பேசியதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக சென்று கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், தடையை மீறி செல்ல முயன்றததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 60க்கும் மேற்பட்டோரைப் போலீசார் கைது செய்தனர்.