செக் மோசடி வழக்கில் சிக்கிய பாஜக மாநில நிர்வாகி - தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Update: 2023-03-15 14:38 GMT

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் வி.எஸ்.ஆர் பிரபு. பாஜகவின் பொருளாதார பிரிவு மாநில செயலாளரான இவர், கடந்த 2012-ஆம் ஆண்டு பரமசிவன் என்பவரிடம் 5 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்த தொகைக்காக பரமசிவனிடம் செக் ஒன்றை வி.எஸ்.ஆர்.பிரபு கொடுத்துள்ளார். ஆனால், வங்கி கணக்கில் பணம் இல்லாததால் அந்த செக்கில் பணம் எடுக்க முடியாது என வங்கி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். மேலும், வாங்கிய கடன் தொகையையும் வி.எஸ்.ஆர்.பிரபு திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார். இது குறித்து பரமசிவன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வி.எஸ்.ஆர்.பிரபுவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்