ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிச்சயம் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மாட்டோம் என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்தது.
இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்கான ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பக்ரைனில் நடைபெற்றது.
இதில் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரை நடத்துவதில் இருந்து கவுன்சில் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.