லிவ் இன் காதலியின் தோழிக்கு வந்த கால் லைவ்வில் காதலன் செய்த கொடூரம் - டெல்லியை அடுத்து பெங்களூரில் அதிர்ச்சி
கர்நாடக மாநிலத்தில் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்த காதலியை காதலன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் சந்தோஷ் தமி மற்றும் கிருஷ்ண குமாரி.
இருவரும் பெங்களூருவில் உள்ள அழகு சாதன நிலையம் ஒன்றில் பணிபுரிந்திருக்கின்றனர்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, ஒரு வருடத்திற்கும் மேலாக லிவ் இன் முறையில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், சந்தோஷ் தமி, காதலியின் தோழிகளுக்கு மெஸேஜ் அனுப்பியும், வீடியோ கால் செய்தும் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பணி முடிந்து வீட்டுக்கு வந்த கிருஷ்ண குமாரி, சந்தோஷ் தமியிடம் இது குறித்து கேட்ட பொழுது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, கிருஷ்ண குமாரியின் தோழி ஒருவருக்கு வீடியோ கால் செய்த சந்தோஷ் தமி அதில் கிருஷ்ண குமாரியை சரமாரியாக தாக்கியிருக்கிறார்.
இதனை பார்த்து பதறிப்போன அந்த பெண் தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்ற போது ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார் கிருஷ்ணகுமாரி.
உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே கொலை செய்த சந்தோஷ் தமியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.