விமான நிலையங்களை சுற்றி 5ஜி சேவைகளுக்கு தடை

Update: 2022-12-01 03:14 GMT

விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவைகளை அளிக்க மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது.

அக்டோபரில் 5ஜி அலைபேசி சேவைகள் முதல் கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் தொடங்கப்பட்டன.

ஆனால் 5ஜி சேவைகளில் பயன்படுத்தப்படும் 3.3 முதல் 3.67 கிகா ஹெர்ட்ஸ் ரக அலைகற்றைகள்,விமானங்களில் உள்ள அல்டிமீட்டர்கள் எனப்படும் உயரம் காட்டும் கருவிகளின் செயல்பாடுகளை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் விமான நிலைய ஓடுபாதைகளில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5ஜி சேவைகள் அளிக்கும் கோபுரங்களை அமைக்கக் கூடாது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆணையிட்டுள்ளது.

இதன் காரணமாக விமான நிலையங்களுக்கு அருகே உள்ள பகுதிகளுக்கு 5ஜி சேவைகள் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விமானங்களில் உள்ள பழைய பாணி அல்டிமீட்டர்களை மாற்றி, புதிய ரக அல்டிமீட்டர்களை பொருத்தும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்